

நாகூர் தர்கா ஆலோசனை குழு, நாகை முஸ்லிம் ஜமாத் தார்கள் முன்னிலையில் நடந்த விழாவில் முன்னதாக சாஹிப் மினராவில் பழக்கவழக்கப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய தர்காவான இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 470-வது கந்தூரி விழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக தர்காவில் உள்ள 5 மினராக்களில் தொடக்க நாளான 10-ந்தேதி கொடி ஏற்றப்படும்.
அதற்கு முந்தைய நிகழ்வான மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) அதிகாலை தொடங்கியது. நாகூர் தர்கா ஆலோசனை குழு, நாகை முஸ்லிம் ஜமாத் தார்கள் முன்னிலையில் நடந்த விழாவில் முன்னதாக சாஹிப் மினராவில் பழக்கவழக்கப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, தஞ்சாவூர் மகராஜா கட்டிக்கொடுத்த பெரிய மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டு, தொடர்ச்சியாக பிற மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் நஜ்முதீன் சாஹிப் தலைமையில் போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.