மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி மாத திருவிழா

முக்கிய நிகழ்வுகளான, அய்யா சரவிளக்கு, திருவிளக்கு பணிவிடை 9 -ந்தேதியும், அய்யா திருத்தேர் உற்சவ நிகழ்ச்சி 11-ந்தேதியும் நடைபெறுகிறது.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி மாத திருவிழா
Published on: 
Summary

அன்று மாலையில், அய்யா இந்திர விமானத்திலும் இரவு பூ பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதலும் நடைபெறுகிறது.

மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம், 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை (2-ந்தேதி), கொடியேற்றத்துடன், திருவிழா துவங்குகிறது.

அய்யா வைகுண்ட பரம்பொருள்

விழா நாட்களில், அய்யா வைகுண்ட பரம்பொருள், அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர் முக சிம்மாசனம், குதிரை, காமதேனு வாகனங்களில், பதிவலம் வருவார். முக்கிய நிகழ்வுகளான, அய்யா சரவிளக்கு, திருவிளக்கு பணிவிடை 9 -ந்தேதியும், அய்யா திருத்தேர் உற்சவ நிகழ்ச்சி 11-ந்தேதியும் நடைபெறுகிறது.

தமிழிசை செளந்தரராஜன்

விழாவில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ. நாராயணன், ஆர்.ஜே.ஆர். ஹெர்பல் ஆஸ்பத்திரி டாக்டர் எஸ்.ஆர்.ஜெய துரை, ஆகாஷ் மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் குமார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், கோவை அய்யா வைகுண்டர் சிவபதி தலைவர் கே.அரி ராமன், திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி தலைவர் எஸ்.தர்மர் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகள்

அன்று மாலையில், அய்யா இந்திர விமானத்திலும் இரவு பூ பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதலும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமிநாதன், பொருளாளர் பி.ஜெயக்கொடி, இணை பொது செயலாளர் கே.ராமமூர்த்தி, துணை தலைவர் வி.சுந்தரேசன், கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ் உள்ளிட்ட தர்மபதி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com