குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கடந்த சில நாட்களாக கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, கடலில் புனித நீராடி துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Published on: 
Summary

நாளை அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று. கோவிலை வந்தடைந்தவுடன் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்கள், கோவில் பூசாரியிடம் காப்பு அணிகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞான மூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

தசரா திருவிழா

இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, கடலில் புனித நீராடி துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை நடந்தது.

நாளை கொடியேற்றம்

நாளை அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று. கோவிலை வந்தடைந்தவுடன் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்கள், கோவில் பூசாரியிடம் காப்பு அணிகின்றனர். அதன்பிறகு நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், இரவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தினமும் மாலையில் கோவில் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com