

கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்களும் மூலவர் சந்நிதியிலும் ஆறுமுகர் சந்நிதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர்.வருகிற 15-ந்தேதி சூரசம்கா ரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் பல்லக்கு, ஆட்டுக்கிடா, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மேளதாளம் முழங்க வானவேடிக்கைகளுடன் மாடவீதி உலா வருகிறார். அசுர உருவ பொம்மைகளும் வலம் வரும்.
முக்கிய நிகழ்ச்சியான 6-ம் நாள் விழாவான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையுடன் நடைபெற உள்ளது. இதனைக்காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். மறுநாள் (திங்கட்கிழமை) மாலை தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
திருத்தணி முருகன்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
மலைக்கோவில் காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு லட்சார்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு இந்த லட்சார்ச்சனை நடைபெறும்.
வருகிற 15-ந்தேதி புஷ்பாஞ்சலியும், 16-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி முன்னிட்டு பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நித்யா, அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன். அறங்காவலர்கள், வி.சுரேஷ் பாபு,ஜி. உஷாரவி,க. மோகனன், மு. நாகன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி புறப்பாடும், சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும், சுவாமி உள் பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. திங்கட்கிழமை காலை அபிஷேகமும், சந்தன காப்பும் நடைபெறுகிறது. மாலை சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு மங்கள வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு வெற்றிலை சாமந்தி செண்பகம் மலர் மாலைகளும் வெற்றிலை மலர் கிரீடமும் அணிந்து ராஜ அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை வணங்கி விரதமாலை அணிந்து கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர். உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் சிறப்பு அபி ஷேகம் நடைபெற்று சிவப்பு பட்டாடையும் சிவப்பு ரோஜா மாலைகளும் அணிந்து சிவப்பு சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்களும் மூலவர் சந்நிதியிலும் ஆறுமுகர் சந்நிதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 14-ந் தேதி வல்லம் சடையீஸ்வரர் கோவிலில் வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசங்காரமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரைப்படி, ேகாவில் நிர்வாக அதிகாரி சோ.செந் தில்குமார் செய்திருந்தார்.