உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் அதிசய நடராஜர்

இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போல காட்சி தருகிறார்.இந்த நடராஜரை அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போல காட்சி தருகிறார்.
உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் அதிசய நடராஜர்
Published on

நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்தல இறைவனை 'பூமிநாதர்' என்றும் அழைக்கிறார்கள். அம்பாளின் பெயர் 'அங்கவளநாயகி' என்பதாகும்.

வரகுண பாண்டியனுக்கு இத்தல இறைவனும், இறைவியும் பஞ்ச லோகத்தால் ஆன குழம்பைக் குடித்து, நடராஜர், சிவகாமி அம்பாள் தம்பதியராக காட்சி கொடுத்துள்ளனர். இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும்.

நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தெள்ளத்தெளிவாக காணப்படுவது சிறப்பாகும். இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com