பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா நடந்தது. 15-ந் தேதி பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.