வீரவநங்கை அம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா

அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வீரவநங்கை அம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா
Published on

அழகியபாண்டியபுரம் வீரவநங்கை அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

பின்னர் அம்மன் தட்டு வாகனத்தில் வீதி உலா வந்தார். அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிய பின்னர் கிணற்றில் நீராடி விட்டு கோவிலை வந்தடைந்தார்.

இரவில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com