

இந்து சமயத்தில் எந்தவொரு செயலை செய்ய தொடங்கும் முன்பும், முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். காரணம், செய்யும் காரியங்கள் தடைகள் இன்றி வெற்றிகரமாக நடைபெற அருள் புரிபவர், விநாயகப் பெருமான். அவரை போற்றும், பத்ம புராணத்தில் இடம்பெற்ற ஒரு மந்திரத்தை பார்ப்போம்.
ஓம் நமோ கணபதயே நமஹ
கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:
த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:
விநாயகஸ்சாருகர்ண: பஸூபாலோ பவாத்மஜ:
'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்கு தலைவனாக விளங்குபவரே, இடையூறுகள் இல்லாது செய்பவரே, அழகான நீண்ட துதிக்கையை உடையவரே, யானை முகம் படைத்தவரே, கங்கா, கவுரி என இரண்டு தாய்களை கொண்டவரே, பக்தர்களுக்கு குறைவில்லாமல் அருள்புரிபவரே, ஒரு தந்தத்தை உடையவரே, பெரிய காதுகளை கொண்டவரே, உலக மக்களை காப்பவரே, பரமனின் புத்திரனே, உனக்கு வணக்கம். எங்கள் தடைகளை எல்லாம் விலக்கி, நிம்மதி பெருவாழ்வு வாழ வழிநடத்துவீராக.
விநாயகர் சதுர்த்தி நாளில், அருகம்புல் மாலை சாற்றி, இந்த மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால் காரிய வெற்றியும், எல்லா வளங்களும் பெறலாம்.