Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் யோகமுண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.

ரிஷபம்

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

மிதுனம்

நன்மைகள் நடைபெறும் நாள். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு. திட்டமிட்ட சில காரியங்களில் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டு.

கடகம்

மங்கலத் தகவல் மனை தேடி வரும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள்.

சிம்மம்

பயணத்தால் பலன் கிட்டும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்திலிருந்து வெளிவந்து சுயதொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.

கன்னி

மனித தெய்வ வழிபாட்டால் மகத்துவம் கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வரன்கள் முடிவாகும்.

துலாம்

நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.

விருச்சிகம்

முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

தனுசு

யோகமான நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

மகரம்

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

கும்பம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கடன் சுமையால் கவலைகள் அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

மீனம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com