Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 அக்டோபர் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Sivan
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-21 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திரயோதசி இரவு 10.39 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : பூரம் இரவு 10.27 மணி வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்

பிரதோஷம், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஜெயம்

ரிஷபம் - மேன்மை

மிதுனம் - உயர்வு

கடகம் - நன்மை

சிம்மம் - விவேகம்

கன்னி - அமைதி

துலாம் - செலவு

விருச்சிகம் - பணிவு

தனுசு - வரவு

மகரம் - நற்செயல்

கும்பம் - தாமதம்

மீனம் - தெளிவு

X

Maalai Malar
www.maalaimalar.com