இந்த வார விசேஷங்கள்: 27-10-2026 முதல் 2-11-2026 வரை

இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.
Vinayagar
Published on: 

27-ந் தேதி (செவ்வாய்)

* நெல்லை காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி.

* பத்தமடை மீனாட்சி அம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை தலங்களில் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* கீழ்நோக்கு நாள்.

28-ந் தேதி (புதன்)

* கார்த்திகை விரதம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

29-ந் தேதி (வியாழன்)

* சங்கடகர சதுர்த்தி.

* நெல்லை காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சல் உற்சவம்.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

31-ந் தேதி (சனி)

* தேய்பிறை சஷ்டி விரதம்.

* தூத்துக்குடி பாகம்பிரியாள், பத்தமடை மீனாட்சி அம்மன் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜர், திருவரங்கம் நம்பெருமாள் அலங்கார திருமஞ்சனம்

* மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* நெல்லை காந்திமதி அம்மன் தவழும் கண்ணன் அலங்காரம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

2-ந் தேதி (திங்கள்)

* தென்காசி உலகம்மை, தூத்துக்குடி பாகம்பிரியாள் தலங்களில் பவனி.

* நெல்லை காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

X

Maalai Malar
www.maalaimalar.com