புரட்டாசி மாத பூஜை - சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடை பெற்று வருகிறது.
Sabarimala Temple
Published on
Summary

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை மாத பூஜையை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நிறைவேற்றுவார். இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடை பெற்று வருகிறது. மேலும் சபரிமலையில் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com