கருட சேவை தரிசிக்க குவிந்த பக்தர்கள்- திருப்பதி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

திருப்பதியில் நேற்று 76,060 பேர் தரிசனம் செய்தனர். 32, 248 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.
Published on
Summary

கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 5-வது நாளான இன்று காலை ஏழுமலையான் மோகினி அவதாரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கருட சேவை

மாலை 6.30 மணிக்கு கருட சேவை உற்சவம் தொடங்குகிறது. தங்க கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்களுக்கு தடை

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பதி மலை உள்ளிட்ட சாலைகளில் 10 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்தங்களை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்து உள்ளது.

பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு பஸ்களில் திருப்பதி மலைக்கு வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் இன்று காலை முதல் நள்ளிரவு வரை மலை பாதையில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சிறப்பு ரெயில்கள்

கருட சேவை காண வரும் பக்தர்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பதியில் இருந்து வேலூர் கன்டோன்ன்மென்ட் வரையும் திருப்பதியில் இருந்து சென்னை கடற்கரை, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

20 மணி நேரம்

திருப்பதியில் நேற்று 76,060 பேர் தரிசனம் செய்தனர். 32, 248 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.56 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com