பழனி முருகன் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உலா

பழனி முருகன் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை விழாவையொட்டி தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உலா வந்தார்.
தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை காண்பித்த காட்சி.
தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை காண்பித்த காட்சி.
Published on

பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்காலபூஜையில் வெள்ளை நிற மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.


108 திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்ட போது எடுத்த படம்.

விழாவையொட்டி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com