உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா

மைசூரு தசரா, நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி விஜயதசமி அன்று வரை நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா
Published on: 

தசரா விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், மைசூரு தசரா என்பது உலகப் புகழ்பெற்றதாகும். கர்நாடகத்தின் 'நாடஹப்பா’ புகழ்பெற்றதாகும். கர்நாடகத்தில் (மாநில விழா) என போற்றப்படும் மைசூரு தசரா, நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி விஜயதசமி அன்று வரை நடைபெறுகிறது.

இந்தத் திருவிழா 15-ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசர்களால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மைசூரு உடையார் மன்னர்களால் தசரா பண்டிகை பாரம்பரிய முறையில் பிரபலமானது. விஜயதசமி நாளன்று, சாமுண்டேஸ்வரி தேவி தங்க அம்பாரியில் (750 கிலோ தங்கம்) அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது ஊர்வலமாக வலம் வருவார்.

ஊர்வலத்தின்போது, இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள் என கொண்டாட்டம் களைகட்டும். தசரா விழாவில் மைசூரு அரண்மனை லட்சக்கணக்கான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இரவு நேரத்தில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் மைசூரு அரண்மனையை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இவ்விழா, கர்நாடகத்தின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com