

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர், சிஆர்பிஎப் ஐஜி, கோவில் பட்டர்கள் உள்பட 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஆர்பிஎப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.
தீபம் ஏற்றுவதற்காக கோவிலில் பூஜை செய்யப்பட்ட தீபக்கொப்பரையை ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மலைக்குக் கொண்டு சென்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.