

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வோமா!
முழுமுதற் கடவுள், தடைகளை நீக்குபவர் ஞானத்தின் அதிபதி என்றெல்லாம் போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளை விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று இந்த பண்டிகை இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரலா மாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அப்படியான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க...
திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 12 மணி முதல் 1 மணிவரையும் மற்றும் 1 மணிமுதல் 2 மணி வரையும் விநாயகரை வழிபடலாம்.
மஞ்சள் பொடி + மைதா ( பிணைப்புப் பொருளாக செயல்படும்) + சிறிது சர்க்கரை + தண்ணீர் சேர்த்து பிசைந்து விநாயகரை உருவாக்கலாம்.
நாளை (செப்டம்பர் 13ந்தேதி) பகல் 3.10 மணி முதல் மாலை 4.20 வரை, அல்லது நாளை மறுநாள் (செப்டம்பர் 14-ந்தேதி) காலை 9.10 மணி முதல் 10.20 வரை.
விநாயகர் சதுர்த்திக்கு சிலையை வாங்கும்போது எப்படி வாங்குவது என்று தெரியாமல் சில தவறான சிலைகளை வாங்குகிறோம். கடையில் பார்க்கிற எல்லா சிலைகளையும் வாங்கக்கூடாது. விநாயகர் சிலை வாங்குவதற்கு என்று ஒருமுறை உள்ளது.
* அமர்ந்திருக்கும் விநாயகரை தான் வாங்க வேண்டும்.
* விநாயகருடைய துதிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
* சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வாங்க வேண்டும்.
* விநாயகர் கையில் பிரசாதம் இருக்கும்மாதிரி சிலையை பார்த்து வாங்குங்கள்.
* மூஷிக வாகனம் விநாயகர் பக்கத்தில் இருக்கும் மாதிரியும் பார்த்து வாங்குகள்.
இந்த மாதிரி சிலையை வாங்குவதால் காரிய தடை நீங்கும், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும், விநாயகரின் முழு அருளும் அன்று நமக்கு கிடைத்து விடும்.
பழங்கள் தானம்: புத்தி கூர்மை, தொழில் லாபம், வம்ச விருத்தி
ஆடை (வஸ்திர) தானம் : நாள்பட்ட நோய்கள் நீங்கி ஆயுள் பலம் கூட்டும்.
விளக்கு/ நெய் தானம் : கண் திருஷ்டி நீங்கும், பித்ரு ஆசி கிடைக்கும்.
தேங்காய் தானம்: காரிய வெற்றி. ராகு கேது தோஷ நிவர்த்தி
மஞ்சள்/ மாங்கல்யப் பொருட்கள்: திருமணத் தடைகள் நீங்கும், சுமங்கலி பாக்கியம்.
அன்னதானம்: வறுமை நீங்கும், தானிய லட்சுமி அருள் கிடைக்கும்
11 சிதறு தேங்காய் உடைத்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.
9 சிதறு தேங்காய் உடைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
7 சிதறு தேங்காய் உடைத்தால் கடன் தொல்லை நீங்கும்.
5 சிதறு தேங்காய் உடைத்தால் சிறந்த கல்வி பெறலாம்.
3 சிதறு தேங்காய் உடைத்தால் உடல் நலம் பெறலாம். தொழில் உயர்வு, வேலை வாய்ப்பு கிடைக்கும்
1 சிதறு தேங்காய் உடைத்தால் தடைகள் நீங்கும்.