

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 4 மணி நேரத்தில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சகோதரா ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது மாட வீதி முழுவதும் நிரம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர்.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வி.ஐ.பி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 4 மணி நேரத்தில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 61,361 பேர் தரிசனம் செய்தனர். 18,722 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3.20 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.