தொடர் புயல் சின்னம் காரணமாக திருப்பதியில் 6 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்

புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாக திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
திருப்பதி கோவில்
Published on: 
Summary

ஆந்திராவில் ஏற்பட்ட புயல் சின்னங்களின் தாக்கம் திருப்பதியில் உணரப்பட்டது. பக்தர்கள் கூட்டம் குறைந்ததால், வழக்கமாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாமல், 6 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் 'அர்னாப்' மற்றும் 'முரசு' என அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு புயல் சின்னங்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஆன்மீகத் தலமான திருப்பதியிலும் எதிரொலித்துள்ளது.

புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாக திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

6 மணி நேரத்தில் சாமி தரிசனம்

திருப்பதியில் நேற்று 72, 806 பேர் தரிசனம் செய்தனர். 18,564 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.89 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3.63 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.

வழக்கமாக இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். ஆனால், தற்போது பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 6 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

X