நோய்களிலிருந்து விடுபட வணங்க வேண்டிய லிங்கம்

மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.
நோய்களிலிருந்து விடுபட வணங்க வேண்டிய லிங்கம்
Published on

ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.

இதற்குரிய திசை மேற்கு.

மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.

சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது.

வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும்.

இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com