சர, ஸ்திர, உபய ராசிகள்

12 ராசிகளில் பஞ்சாங்கப்படி எந்தெந்த ராசிகள் சர, ஸ்திர, உபய ராசிகள் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சர, ஸ்திர, உபய ராசிகள்
Published on

சர ராசிகள்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ‘சரம்’ என்றால் ‘இயங்கிக் கொண்டே இருப்பது’ என்று பொருள். ‘சரம்’ என்பது நகரும் தன்மையை குறிப்பதால் இடப்பெயர்ச்சியை தந்து கொண்டே இருக்கும். எண்ணம் சீராக இருந்தாலும் செயல்படுத்த முடியாத தன்மை மிகுதியாக இருக்கும். 4-ம் வீட்டு அதிபதி அல்லது 4-ல் நின்ற கிரகம், சர ராசியாக இருந்தால் 60 வயது வரை வாடகை வீட்டிலேயே குடியிருக்கும் நிலை இருக்கும். அத்துடன் அடிக்கடி வீடு மாறிக் கொண்டே இருப்பார்கள்.

ஸ்திர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். ‘ஸ்திரம்’ என்றால் ‘ஒரே நிலையில் இருப்பது’ எனப் பொருள். வாழ்நாள் முழுவதும் சொந்த வீட்டிலேயே இருப்பவர்கள், சொத்துக்கள் குவிந்து கொண்டே இருப்பது, சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் கிடைப்பது, பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.

உபய ராசிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். ‘உபயம்’ என்றால் ‘ஒரே நிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது’ எனப் பொருள். ‘உபயம்’ என்பது இரு தன்மைகளையும் குறிக்கும். உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள் இவர்கள். அதனால் சொத்து வாங்குவதும், விற்பதும் இவர்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு போவார்கள். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கும் போவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com