சோனி PS5 வாங்க திட்டமா? இந்த தேதியில் தயாராக இருங்க!

சோனி நிறுவனத்தின் புதிய PS5 அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
சோனி பிளேஸ்டேஷன் 5
சோனி பிளேஸ்டேஷன் 5
Published on

சோனி PS5 கேமிங் கன்சோல் அடுத்த விற்பனை நாளை (மே 13) நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு புதிய PS5 அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஸ்டாக் தட்டுப்பாடு பிரச்சினையில் சோனி சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக குறைந்த யூனிட்கள் அவ்வப்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு சோனி PS5 அடுத்த விற்பனை நாளை நடைபெற இருக்கிறது.

விற்பனைக்கு முன்பே இதனை வாங்குவதற்கான முன்பதிவுகள் அமேசான், ஷாப் அட் எஸ்.சி., கேம்ஸ்திஷாப், க்ரோமா, ப்ளிப்கார்ட், விஜய் சேல்ஸ் என பல்வேறு முன்னணி தளங்களில் நடைபெற்று வருகிறது. சோனியின் புதிய PS5 கேமிங் கன்சோல் விற்பனை நாளை மதியம் சரியாக 12 மணிக்கு துவங்க இருக்கிறது. முந்தைய விற்பனைகளை போன்றே இந்த முறையும் விரைவில் முடிந்து விடும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் சோனி PS5 ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆன டிஸ்க் எடிஷன் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் மற்றொரு வேரியண்ட் ஆன PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு வலைதளங்களில் PS5 மாடலுடன் கிரான் டூரிஸ்மோ 7 கேம் சேர்த்து ரூ. 52 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com