டெஸ்டிங்கில் சிக்கிய யமஹா ஃபேஸர் 250

யமஹா நிறுவனத்தின் புதிய ஃபேஸர் 250 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விரைவில் எதிர்பார்க்கப்படும் ஃபேஸர் 250 தகவல்களை பார்ப்போம்.
டெஸ்டிங்கில் சிக்கிய யமஹா ஃபேஸர் 250
Published on

புதுடெல்லி:

யமஹா FZ25 மாடலின் ஃபேர்டு பதிப்பாக தயாராகி வரும் யமஹா ஃபேஸர் 250 டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. டெஸ்ட் செய்யப்பட்ட யமஹா ஃபேஸர் கோல்டு மற்றும் ரெட் நிறம் கொண்டிருக்கிறது. மேலும் மற்ற ஃபேஸர் மாடல்களை போன்று இல்லாமல் புதிய மாடலில் முழுக்க பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

புதிய மாடலில் அனைவரையும் கவரும் விதமாக இதன் ஹெட்லேம்ப்கள் அமைந்துள்ளது. முன்பக்க ஹெட்லேம்ப்களில் இரண்டு எல்இடி ஸ்ட்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க வசீகரமாக இருப்பதோடு இரண்டு ஏர்-இன்டேக்கள் காட்சிக்காக பொருத்தப்பட்டுள்ளது.

மற்ற பாகங்களான டையர், வீல், டிஸ்க் பிரேக்கள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவை FZ25 போன்றே காட்சியளிக்கிறது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எக்சாஸ்ட் யுனிட் உள்ளிட்டவை FZ25-இல் வழங்கப்பட்டதை போன்றே காட்சியளிக்கிறது. விலையை கட்டுக்குள் வைக்கும் படி பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு ABS வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது.

ஃபேஸர் 250 மாடலில் 249 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 20 bhp செயல்திறன் மற்றும் 20 Nm பீக் டார்கியூ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய மாடல்களை விட எடை அதிகமாக இருக்கும் யமஹா 250 பண்டிகை காலத்தில் வெளியிடப்பட்டு இவற்றின் விலை FZ25 மாடலுடன் ஒப்பிடும் போது சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

புதிய ஃபேஸர் 250 பஜாஜ் பல்சர் RS200 மற்றும் ஹோண்டா CBR250R மாடல்களுக்கு போட்டியாக அமையும்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com