உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி: கிரெமி சுமித்

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரெமி சுமித் கூறியுள்ளார். #SAvIND #GraemeSmith #Kohli
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி: கிரெமி சுமித்
Published on

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரெமி சுமித் கூறியதாவது:-

விராட் கோலியின் ஆட்டம் வியக்கும் வகையில் இருக்கிறது. அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவரது உணர்ச்சி வசம்தான் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவதாக நினைக்கிறேன். அது மற்ற வீரர்களுக்கும் ஊடுருவி இருக்கலாம். ஆனால் கோலி தனது உணர்ச்சிவசத்தை கட்டுபடுத்தி கொள்ள வேண்டும். வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற மனநிலையை அணிக்கு ஏற்படுத்தி வழி நடத்தி செல்கிறார். நீண்ட நாட்கள் இந்தியா முதலிடத்தில் இருக்கும். கோலி மிகப்பெரிய சாதனைகள் புரிவார் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com