சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு விட்ட இலங்கை அரசு

சீனக் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமான நிலையத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு விட்ட இலங்கை அரசு
Published on

இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகம் அருகே அமைந்துள்ள மத்தள ராஜபக்‌ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து நடத்துமாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், கடந்த 2013ஆம் ஆண்டு சீன வங்கியிடமிருந்து 209 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற்று தொடங்கப்பட்டது.

பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் இருக்கும் இந்த விமான நிலையம், உலகின் மிகவும் வெறிச்சோடிய விமான நிலையம் என்று அறியப்படுகிறது.

இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு விமான நிலையத்தை எடுத்து நடத்த ஜூன் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மத்தள விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் ஹம்பாந்தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால், இலங்கை எடுத்த முடிவை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com