அமெரிக்க விமானத்தில் ஏற்றி செல்லப்பட்ட ஈரான் குடியேறிகள் - பாகிஸ்தானில் நுழைவதற்கு தடை விதிப்பு

அமெரிக்காவுடன் தூதரக உறவுகளை பேணாத நாடுகளாக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் பார்க்கப்படுகிறது.
Iranian immigrants
Published on: 
Summary

அமெரிக்காவில் வசித்து வந்த ஈரானிய குடியேறிகளை வெளியேற்றி, அவர்களை மீண்டும் ஈரானுக்கு விமானத்தில் அனுப்ப முயன்றபோது, இஸ்லாமாத்தின் வான்வழித் தடத்தை பயன்படுத்த பாகிஸ்தான் மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் ஈரான் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் சூழலில், தூதரக உறவுகளை பேணாத நாடுகளின் குடியேறி மக்களை அமெரிக்கா தங்கள் நாட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

அமெரிக்காவுடன் தூதரக உறவுகளை பேணாத நாடுகளாக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, அமெரிக்காவில் வசிக்கும் ஈரான் குடியேறி மக்களை வலுக்கட்டாயமாக விமானத்தின் மூலம் வெளியேற்றி, பாகிஸ்தான் வழியாக அனுப்ப அமெரிக்கா அனுப்பி வருகிறது.

முன்னதாக செப்டம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில், ஈரானுக்கு மூன்று நாடுகடத்தல் விமானங்கள் மூலமாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஈரானியர்களை அமெரிக்கா வெளியேற்றி இருந்தது.

இதை தொடர்ந்து தற்போது மீண்டும் அமெரிக்காவில் வசித்து வரும் ஈரான் குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சி நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருந்து நேற்று ஈரான் குடியேறிகளை ஏற்றி சென்ற விமானம் ஒன்று, இஸ்லாமாபாத் வழியாக ஈரானுக்கு செல்ல முயன்றபோது, தங்கள் வழித்தடத்தை பயன்படுத்த பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் அரிசோனாவில் தரையிறக்கப்பட்டு, அங்குள்ள ஒரு முகாமிற்கு ஈரான் குடியேறிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு, நாடு கடத்தப்படுவோரின் பயணத்திற்கு, வசதி செய்து தருவதாக பாகிஸ்தான் முன்னதாக தெரிவித்திருந்தது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்பாட்டிற்கு வர இஸ்லாமாத் நம்புகிறது” என கூறினார்.

X