விபத்தில் சிக்கிய துருக்கி ராணுவ ஹெலிகாப்டர்.. 5 வீரர்கள் பலி

விமானப்படைக்குச் சொந்தமான ஏஎஸ்-532 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
  துருக்கி ஹெலிகாப்டர் விபத்து
துருக்கி ஹெலிகாப்டர் விபத்து
Published on: 
Summary

துருக்கி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு துருக்கியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை துருக்கிய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

அறிக்கை

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, "பயிற்சிப் பணிகளுக்காக எஸ்கிசெஹிரிலிருந்து புறப்பட்ட நமது விமானப்படைக்குச் சொந்தமான ஏஎஸ்-532 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பணியாற்றிய ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் துருக்கிய ஆயுதப் படைகள் சம்பந்தப்பட்ட இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து இதுவாகும்.

X