

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
பின்னர் இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தற்போது வரை மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் விதித்த 7 நிபந்தனைகளை அமெரிக்கா நிராகரித்தது.
இந்தநிலையில் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் அமெரிக்காவிடம் கத்தார் நாட்டு மத்தியஸ்தர்கள் மூலம் தெரிவித்தது.
இந்த முன்மொழிவில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்குவது, எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்துவது மற்றும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பது ஆகிய நிபந்தனைகள் இடம்பெற்று உள்ளது.
இதை உறுதிப்படுத்திய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது,"ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை 7 நாட்களுக்குள் மீண்டும் தொடங்குவதற்கும் ஈரான் முன்மொழிந்துள்ளது.
நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், 7 நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு இயல்பான கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுக்கலாம். தற்போது முடிவெடுக்கும் அதிகாரம் அமெரிக்காவின் கையில் உள்ளது என்றார்.
டிரம்ப் நிராகரிப்பு
ஆனால் ஈரான் அளித்த 7 போர் நிறுத்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்து உள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்கும் இடைக்காலத் தேர்தல்க ளுக்குப் பிறகு ஈரான் மீதான மீண்டும் தாக்குதல் தொடங்கலாம் என்று தனது உதவியாளர்களிடம் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான செய்தியை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் வெளியிட்டு உள்ளது. அதில் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்குமா என்பதில் டிரம்ப் சந்தேகத்துடன் இருக்கிறார் என்றும் இதனால் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஈரான் மீது தீவிர போரை அமெரிக்கா தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும், தங்களது அணுசக்தித் திட்டம் தொடர்பாக எந்தவிதச் சலுகைகளையும் அளிக் கப்போவதில்லை என்று ஈரான் தரப்பில் தெரி விக்கப்பட்டு உள்ளது.