பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது.. ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வார்னிங்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை உள்ளது
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
Published on: 
Summary

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்' உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு ஆதரவாக இருப்பதாகவும் பாகிஸ்தான் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை தலிபான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

அண்மை காலமாக இரு நாடுகளுமே எல்லை பகுதிகளில் ஒருவர் மீதொருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் எச்சரிக்கை

பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பயங்கரவாதம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தங்கள் குடிமக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தலிபான் ஆட்சியை குற்றம்சாட்டிய பாகிஸ்தான், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் அதன் அறிக்கையில், "பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த ஆப்கானிஸ்தான் தயாராக இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைவதற்கு ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளே முக்கிய காரணம்.

பழியை மற்றவர்கள் மீது போடுவதாலும், வெற்று வாக்குறுதிகளை அளிப்பதாலும், பாகிஸ்தானின் கொள்கைகளைக் கேள்விக்குட்படுத்துவதாலும் இந்த நெருக்கடி தீர்க்கப்படாது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையும் பொறுப்பற்ற தன்மையும் தனது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதை பாகிஸ்தான் அனுமதிக்காது" என்று கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் தயாராக இல்லை என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதற்கு பதிலடியாகவே பாகிஸ்தான் இந்த பதிலை வழங்கியுள்ளது.

X