

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் (மேற்குக் கரை) பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தது ஸ்பானியப் பத்திரிகையாளர் லாரா டி சிக்லானா மீது இஸ்ரேலியக் குடியேறிகள் உடல் ரீதியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஸ்பெயினின் 'டெலிசின்கோ' தொலைக்காட்சி நிறுவனத்தின் போர்க்காலச் செய்தியாளரான லாரா டி சிக்லானா இத்தாக்குதலுக்கு உள்ளானார்.
ஸ்பானியத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளியில், ஒரு குழுவாகச் சூழ்ந்துகொண்ட இஸ்ரேலியக் குடியேறிகள் அவரை நோக்கி ஆக்ரோஷமாகக் கத்துவதும், சுவற்றில் தள்ளிவிடுவதும் பதிவாகியுள்ளது. அங்கிருந்த சிலர் இச்சம்பவத்தைத் தங்கள் கைபேசிகளில் படம் பிடித்துள்ளனர்.
மேற்குக் கரையின் ஜெரிகோ பகுதியில் பாலஸ்தீனியக் குடும்பங்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் மோதல்கள் குறித்து அவர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவத்தின் காணொளி வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பத்திரிக்கையாளர் தாக்குதலுக்கு உள்ளாகும்போது தாக்குதல் நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சீருடையில் நின்று கொண்டிருந்த போதிலும், அவர்கள் தாக்குதலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது காணொளியில் தெரிகிறது.இந்த தாக்குதல் குறித்து கணொளி வெளியான நிலையில் இது குறித்து காவல்துரை விசாரணை தொடங்கியுள்ளது
பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதலுக்குப் பாலஸ்தீனிய ஊடக அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக அக்டோபர் மாதத்திலும் அமெரிக்கப் புகைப்படப் பத்திரிகையாளர் ஹெய்டி லெவின் இதேபோல் மேற்குக் கரையில் குடியேறிகளால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது