ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவு

உடனடியாக சேதம் அல்லது உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Russia
Published on: 
Summary

ரஷியாவின் கம்சட்கா பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நேரப்படி நேற்று மாலை சுமார் 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 205 கி.மீ ஆழத்தில் உருவானதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, சுமார் 188 கி.மீ ஆழத்தில், கம்சட்கா தீபகற்பத்தில் யெலிசோவோவுக்கு வடக்கு-வடமேற்கே சுமார் 62 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளது.

கம்சட்கா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. இங்கு பசிபிக் தட்டு, ஒகோட்ஸ்க் தட்டுக்கு அடியில் நழுவுவதால், இப்பகுதி நிலநடுக்கங்களுக்கு அதிகம் உள்ளாகிறது.

கடந்த 2025 ஜூலை 30 அன்று, தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1900-க்குப் பிறகு உலகளவில் பதிவான வலுவான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று என்றும், 1952-க்குப் பிறகு அப்பகுதியைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

2025-ம் ஆண்டு நிலநடுக்கம் சுமார் 35 கி.மீ ஆழத்தில் உருவாகி சுனாமியை ஏற்படுத்தியது. இதனால் ஜப்பான், ஹவாய், சிலி உள்ளிட்ட பசிபிக் பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் சேதம் மற்றும் சிறிய காயங்கள் பதிவாகின.

உடனடியாக சேதம் அல்லது உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X