பீட்சா டெலிவரி செய்த இந்தியர்... இன்று 3 உணவகங்கள், வீடு, BMW காரின் உரிமையாளர்! சாதித்தது எப்படி?

11 ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளார்
pizza delivery
Published on

பீட்சா கடை வேலை

ஆஸ்திரேலியாவில் பீட்சா கடை ஒன்றில் வேலை செய்து வந்த இந்தியர் ஒருவர், வெறும் 11 ஆண்டுகளில் ஆஸ்திரேலியக் குடிமகனாகி, அங்கு ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்தி, சொந்த வீடும் வைத்துள்ளார்.

அந்த நபரின் இந்தக் கதையை, அவரது மைத்துனரும் தொழிலதிபருமான வினீத் கே, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில்,

தனது மைத்துனர் 11 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றதாக வினீத் தெரிவித்துள்ளார்.

படிப்பை முடித்த பிறகு, அவரால் தனது துறையில் வேலை கிடைக்காததால், பீட்சா கடை ஒன்றில் முழுநேரப் பணியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். வாடிக்கையாளர்களுக்கு பீட்சாக்களை விநியோகிப்பதும் அவரது பணிகளில் ஒன்றாக இருந்தது என்று கூறியுள்ளார்.

வெறும் மூன்றே ஆண்டுகளில், ஒரு பீட்ஸா ஃபிரான்சைஸில் முதலீடு செய்வதற்குத் தேவையான பணத்தை அவரால் சேமிக்க முடிந்தது. அவர் ஒரு பீட்ஸா கடையில் முழுநேர வேலையில் சேர்ந்து, வேலை செய்யத் தொடங்கினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கூட்டாண்மை மற்றும் சிறிதளவு நிதியுதவியுடன், ஒரு பீட்ஸா ஃபிரான்சைஸைத் தொடங்கினார் என்று வினீத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை

மேலும் இது பற்றி கூறுகையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில், அவர் இந்தியாவுக்குத் திரும்பி திருமணம் செய்துகொண்டு மனைவியையும் உடன் அழைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அவரது பீட்சா கிளை நிறுவனம் செழித்தது, மேலும் அவர் கூடுதலாக இரண்டு கிளைகளை வாங்கினார். இன்று, அவர் மூன்று உணவகங்களை மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் தனக்கென ஒரு வீட்டையும், ஒரு பிஎம்டபிள்யூ காரையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

முயற்சி

தற்போது அவரின் பெற்றோரையும் ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் அழைத்து வந்துள்ளார் என்று வினீத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வினீத், தனது மைத்துனர் ஆஸ்திரேலியக் குடிமகனாக ஆன வெற்றியைக் கொண்டாடும் விதமாக, அவரது கதையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com