மெக்கா தாக்கப்பட்டால் பாகிஸ்தான் தனது கடமைகளை நிறைவேற்றும்: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்

மெக்கா பாதுகாப்புக்கு தோளோடு தோளாக நிற்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Pakistan–Saudi security pledge
Published on
Summary

ஏமனில் உள்ள முக்கிய போக்குவரத்து வழித்தடமான பால்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக தீவிரமாக போர் தொடுத்து வரும் நிலையில், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சவுதியில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஆளில்லா விமானத்தை ஏவி ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது.

மேலும் ஹவுதிகள் ஏவிய ஆளில்லா விமானம் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி அரேபியா தெரிவித்தது.

ஹவுதி மறுப்பு

இந்த குற்றச்சாட்டை மறுத்த ஹவுதிகள், சவுதி அரேபியா பழைய பொய்களை பரப்பி வருவதாக கூறியது. மேலும் இஸ்லாத்தின் முக்கியமான ஒரு தளத்தை குறிவைப்பது பற்றி தங்கள் குழு நினைத்துக்கூட பார்க்காது என்றும் ஹவுதி அமைப்பு கூறியது.

இதையடுத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் சம்பவத்திற்கு, பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

மேலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு திரும்புமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.

சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் முழு ஆதரவையும் அளித்து, தோளோடு தோள் நிற்கும் எனவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மெக்கா தாக்கப்பட்டால் அதை பாதுகாக்க எந்த ஒப்பந்தமும் தேவையில்லை என கூறினார். மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் புவியியல் எல்லைகள் மீறப்படும் பட்சத்தில், பரஸ்பர பாதுகாப்பிற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்றும் கூறினார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர்

கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், சவுதி அரேபியா மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் எடுத்துரைத்தார்.

இதையடுத்து ஏமன் விவாகரங்களில் ஈரான் தலையிடுவதில்லை என அமைச்சக் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் ஹவுதிகள் தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகள், முற்றிலும் அவர்களது சுதந்திரமான முடிவுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com