இந்துக்களை பொறுத்துக் கொள்கிறோம்.. இந்தியா செல்வதைவிட அவர்கள் இங்கேயே இருக்க விரும்புகிறார்கள் - பாகிஸ்தான் அதிபர்

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 4 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றனர் என்ற அதிபரின் கூற்று முரண்டபாடாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர்
Published on

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் இந்தியாவிற்கு செல்வதை விடப் பாகிஸ்தானிலேயே தங்கியிருக்க விரும்புகின்றனர் என அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அதிபர் ஜர்தாரி,

பேச்சு

"பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியர்களின் சிந்தனைகள் முற்றிலும் வேறுபட்டவை. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தங்களது மதச் சடங்குகளை பின்பற்றுவதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 4% இந்து மக்கள் உள்ளனர். அவர்கள் வேறு எங்கேயும் இருப்பதை விட இங்குதான் மிகுந்த சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிற்கு செல்வதை விட எங்களுடனே இருக்க விரும்புகிறார்கள்" எனக் கூறினார்.

சர்ச்சை

தொடர்ந்து அவர் பேசிய வார்த்தை சர்ச்சை ஆகியுள்ளது. அவர் கூறியதாவது, "இந்தியர்கள் 'அகண்ட பாரத' தத்துவத்தை நம்புகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினரை முஸ்லிம்கள் 'பொறுத்துக் கொள்கிறார்கள்'" என குறிப்பிட்டுள்ளார். Tolerate என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஜர்தாரியின் இந்த பேச்சுக்கு இந்தியாவில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் அதிபர் 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைக் குறிப்பிட்டுப் பிரிவினைவாத அரசியலைச் செய்ய முயல்கிறார் என்றும், மற்ற நாடுகளைப் பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டுத் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

மக்கள் தொகை

மேலும் பாகிஸ்தான் மக்கள் தொகையில் 4 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றனர் என்ற அதிபரின் கூற்று முரண்டபாடாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் 2023ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அங்குள்ள இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 52 லட்சம், அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.17% மட்டுமே ஆகும்.

பாகிஸ்தான் பிரதமர்

இதே நிகழ்வில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், " "பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது.

கண்ணியத்துடனும் உறுதியுடனும் நாம் அமைதியை நாடுகிறோம். இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதிக்கான உத்தரவாதமாக விளங்குகிறது.

ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்" என எச்சரிதது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாக குறைத்துள்ளது.

இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பாகிஸ்தான் பெருமளவில் நம்பியுள்ளதால், நீரை திறந்துவிடும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com