ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!

குண்டு வீசியதில் வீடு தரைமட்டம்; 3 பேர் பலி
Air strike
Published on
Summary

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச எல்லையான டுராண்ட் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், 2 நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே இந்த எல்லையில் அடிக்கடி கடுமையான பீரங்கித் தாக்குதல்களும் ஆளில்லா விமானத் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் தாக்குதல்

இந்த நிலையில் கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் இன்று பாகிஸ்தான் விமான தாக்குதலை நடத்தியுள்ளது.

குனார் மாகாணத்தின் நர்கல் மாவட்டத்தில் உள்ள பதங் பகுதியில், தாழ்வாகப் பறந்த பாகிஸ்தானிய விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளது. இதில் பொதுமக்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

3 பேர் பலி

நூர்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவரின் வீட்டை பாகிஸ்தான் விமானங்கள் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அந்த வீடு முற்றிலும் தரைமட்டமானது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருந்தபோது இரவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். எனினும் சேதத்தின் முழுமையான மதிப்பீடு இன்னும் செய்யப்பட வில்லை.

இரண்டாம் கட்ட வான்வழித் தாக்குதல்

இதைத் தொடர்ந்து, தலிபான் போராளிகள் எல்லையோர பாகிஸ்தான் நிலைகளைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.

பக்திகா மாகாணத்தின் பர்மல் மாவட்டத்தில் அதிகாலை 4 மணியளவில் இரண்டாவது கட்ட வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோர் கண்டி பகுதியில் இருந்த ஒரு காலிக் கடையும், ரக்கா பகுதியில் இருந்த ஒரு வீடு அழிக்கப்பட்டதாகவும், அந்த இடங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தலிபானுடன் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com