அமெரிக்க வீரரை கொன்றால் 30,000 டாலர்கள் - பெண்களுக்கு இருமடங்கு வெகுமதி அறிவித்த ஈரான்!

மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற தனது நாட்டின் அழைப்பை ஹதாமி ஆதரித்தார்.
Iran Army
Published on

அமெரிக்க ராணுவ வீரரை கொன்றால் 30,000 டாலர்கள் சன்மானம் வழங்குவதாக ஈரான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும், பெண்களுக்கு இதற்கான வெகுமதி இரட்டிப்பாக்கி 60,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வீரர்களைப் பிடிப்பதற்காக 30,000 டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய இராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் பங்கேற்க "பெரும் எண்ணிக்கையிலான கோரிக்கைகள்" வந்ததை தொடர்ந்து இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக ஐ.ஆர்.என்.ஏ. அரசு செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

வெகுமதி அறிவிப்பு:

"ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரரை கொன்றாலோ அல்லது பிடித்து ஒப்படைத்தாலோ, ஈரான் இஸ்லாமிய குடியரசின் இராணுவத்திடம் இருந்து 30,000 டாலர்கள் அல்லது 5 பில்லியன் டோமான்களுக்கு இணையான வெகுமதி வழங்கப்படும். இத்தகைய செயலை மேற்கொள்ளும் துணிச்சல்மிக்க ஈரானிய பெண்களுக்கு இரட்டிப்பு வெகுமதி வழங்கப்படும்," என்று ஹதாமி கூறினார்.

இருப்பினும், அமெரிக்க வீரர்களை கொல்வது அல்லது பிடிப்பது எப்போது, ​​எங்கே நடைபெறும் என்பது குறித்த விவரங்களை அவர் அளிக்கவில்லை.

மத்திய கிழக்கில் அமெரிக்க-ஈரான் போர் தொடங்கியதில் இருந்து , ஈரான் விமானி ஒருவர் காயமடைந்த அந்த ஒரு சம்பவத்தை தவிர, அமெரிக்க படைகள் அங்கு தரைப்படையாக நிறுத்தப்பட்டதாக அறியப்படவில்லை.

புதிய ஆயுதம்:

தி ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட மற்றொரு அறிக்கையின்படி, அமெரிக்க வீரரை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இருமடங்கு விலைக்கு வாங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நபருக்கு புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் ஹதாமி கூறியதாக தெரிவிக்கிறது.

ஈரானுடனான போரின்போது, ​​தங்களது ராணுவ பலம் குறித்த அமெரிக்காவின் கூற்றுக்கள் அம்பலமாகிவிட்டதாக அவர் அறிவித்தார். "பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா அல்லது ஹார்முஸ் நீரிணைக்குள் நுழைய அவர்களுக்கு இனி அனுமதி இல்லை" என்று கூறி, மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற தனது நாட்டின் அழைப்பை ஹதாமி ஆதரித்தார்.

ஜூன் 17-ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஈரான் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 60 நாள் காலக்கெடு நெருங்கி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 28 முதல் 40 நாட்கள் நீடித்த சண்டைக்குப் பிறகு, இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானும் அமெரிக்காவும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கும், நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை தொடரவும் ஒப்புக்கொண்டிருந்தன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com