முடிவுகளை ஏற்றுக்கொண்டார் இஸ்ரேல் ஜனாதிபதி... நாடாளுமன்ற தேர்தலில் நெதன்யாகு கட்சி தோல்வி - தேர்தல் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எவராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தேர்தல் நடைபெறும்.
முடிவுகளை ஏற்றுக்கொண்டார் இஸ்ரேல் ஜனாதிபதி... நாடாளுமன்ற தேர்தலில் நெதன்யாகு கட்சி தோல்வி - தேர்தல் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Published on: 

இஸ்ரேலில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.

நெதன்யாகுவின் கூட்டணி 53 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான ஐசன்கோட் கூட்டணி 48 தொகுதிகளிலும், பாலஸ்தீன அரபு கட்சிகள் 19 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களையும் எந்தக் கட்சியும் பெறாததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர்

தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், வெளிநாட்டினரின் உதவியுடன் அரபுக் கட்சிகள் வாக்குகளை “திருடிவிட்டதாக” பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த முறைகேடு புகார்களை நிராகரித்த இஸ்ரேல் தேர்தல் ஆணையம், இன்று இறுதி முடிவுகளுக்கான சான்றிதழை அந்நாட்டு குடியரசுத் தலைவர் ஐசக் ஹெர்சாக்கிடம் அளித்தது.

இத்தேர்தல் முடிவுகளை அவரும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இன்று அந்நாட்டின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் நீதிபதி நோம் சோல்பர்க்கிடமிருந்து தேர்தல் முடிவுகளின் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார்.

மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்குவதாகவும் கூறியுள்ளார்.

அடுத்தது என்ன?

குடியரசுத் தலைவர் ஐசக் ஹெர்சாக் நாடாளுமன்றத் தேர்வில் வென்ற அனைத்துக் கட்சிகளுடனும் இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ ஆலோசனை நடத்துவார்.

இதன்பிறகு, ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஒருவருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். அவருக்கு கூட்டணி அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

கட்சிகளுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலைச் சந்திக்க நேரிடும். அதுவரை நெதன்யாகுவே தற்காலிகப் பிரதமராக நீடிப்பார்.

X