

இஸ்ரேலின் 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
நெதன்யாகுவின் கூட்டணிக்கு (46+7) 53 இடங்களும், ஐசன்கோட்டின் அணிக்கு 48 இடங்களும் உள்ளன. இதனால் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஐசன்கோட் அரபு கட்சிகள் (19 இடங்கள்) கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.
இதற்கிடையே இஸ்ரேலின் நலனுக்கான கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று நெதன்யாகு, ஐசன்கோட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பு ஐசன்கோட் நிராகரித்ததோடு நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில்தான் இஸ்ரேல் அரசியலில் நிலவி வரும் ஆட்சி அமைக்கும் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டும் இன்று நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய கூட்டணி அரசு அமைந்தால் முதலில் ஐசன்கோட் பிரதமராகப் பொறுப்பேற்கலாம் என்றும், பின்னர் தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாகவும் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவை வரவேற்றாலும், நெதன்யாகுவின் உண்மையான அரசியல் நோக்கம் குறித்து ஐசன்கோட் சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைக்கு 24 மணி நேர காலக்கெடுவும் விதித்திருந்தார்.
இன்று டெல் அவிவில் உள்ள கிரியா ராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு விளக்கத்துடன் இரு தலைவர்களின் சந்திப்பு தொடங்கியது.
இருப்பினும், பிரதமர் பதவியை மாற்றி வழங்குவது, பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன.
டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் புதிய அரசை அமைக்க ஐசன்கோட் முயற்சி செய்து வருகிறார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு இஸ்ரேலின் அரசியல் எதிர்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையே நெதன்யாகு உடனான பேச்சுவார்த்தைக்கு ஐசன்கோட் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.