அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது: பாகிஸ்தான் வைத்த கோரிக்கைக்கு ஈரான் எதிர்ப்பு

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயல்வதாக குற்றம்சாட்டி, அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
Pakistan - Iran Defence Minister
Published on: 
Summary

ஈரான் அரசாங்கம் யுரேனியம் மூலக்கூறு மூலம் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஈரான் வைத்துள்ள யுரேனியத்தை வேறு நாட்டிற்கு மாற்றும்படி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிம் முனிர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயல்வதாக குற்றம்சாட்டி, அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

ஆனால் அணு ஆயுத சோதனை குற்றச்சாட்டிற்கு ஈரான் அரசாங்கம் இன்று வரை மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையில் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் அரசாங்கம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த மாதங்களில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏழு நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு ஈரான் விதித்தது.

இந்த நிபந்தனைகளுக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா, ஈரானுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தான் கோரிக்கை

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, ஈரான் அரசாங்கம் தனது அணு ஆயுத சோதனையை நிறுத்துமாறு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிம் முனிர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் ஈரான் நாட்டில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை மற்றொரு நாட்டிற்கு மாற்ற வேண்டும் எனவும் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

ஈரான் பாதுகாப்பு அமைச்சர்

இந்த நிலையில் அமெரிக்கா முதலில் ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தி விட்டு, தாங்கள் முன்மொழிந்த ஏழு நிபந்தனைகளையும் முதலில் நிறைவேற்ற வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் மெஹ்சென் ரெசாய் கூறுகையில், “செறிவூட்டப்பட்ட யுரேனிய அணு ஆயுத பொருளின் ஒரு சிறு துளி கூட ஈரானை விட்டு வெளியேறாது.

இத்தகையை பொருட்கள் ஈரான் மக்களுக்கு ஒரு பெரும் சொத்தாகவும், தேச நலனின் பொக்கிஷமாகவும் விளங்குகின்றன. இவை நாட்டிற்குள் பயன்படுத்தப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டவை.

ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதில் இருந்துதான், இந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அணுகுண்டு தயாரிப்பதற்கு சுமார் 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படும் நிலையில், ஈரான் வைத்துள்ள சுமார் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, வேறு எந்த நாட்டிற்கும் ஒப்படைக்க போவதில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com