கலிபோர்னியாவில் சிகிச்சைக்கு வந்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: 73 வயது இந்திய வம்சாவளி கைது

இந்திய வம்சாவளியை உள்ளூர் வாசிகள் ஹீலர் என்று அழைத்து வந்துள்ளனர்.
california
Published on

கலிபோர்னியா

கலிபோர்னியாவின் செல்மா பகுதியில் வசித்து வருபவர் 73 வயதான பால்சிங். அங்கு அவர் அக்குபிரஷர் சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இதனால் அங்குள்ள மக்கள் அவரை ஹீலர் என்று அழைத்து வருவதாக கூறப்படுகிறது.

வன்கொடுமை புகார்

இந்த நிலையில் பால்சிங்கின் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக வந்த நான்கு பெண்களை பாலியல் ரீதியாக அத்துமீறியதாக 73 வயது இந்திய வம்சாவளி நபர் பால்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு

பால்சிங்கிடம் சிகிச்சை பெற்ற நான்கு பெண்கள் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை வெவ்வேறு காலகட்டங்களில் இந்த சம்பவங்கள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்

பால்சிங்கிடம் சிகிச்சை பெறுவதற்காக கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் செல்மாவுக்கு வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்மா காவல்துறை தகவலின்படி , அவரிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் முறையற்ற வகையில் தொடுதல் நடப்பதாக வாடிக்கையாளஎர்களிடம் இருந்து புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த வழக்கில் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பால்சிங்கிடம் சிகிச்சை பெற்றவர்கள் யாரேனும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருந்தால், போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விளக்கம்

பால்சிங்கின் வழக்கறிஞர் எடி ரூயிஸ் தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில், பால்சிங் அக்குபிரஷர் சிகிச்சை அளித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான பயிற்சியை பெற்ற அவர், பின்னர் செல்மாவுக்கு சென்ற பிறகு ஆன்லைன் மூலம் கூடுதல் பயிற்சியும் பெற்றதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், பால்சிங்கிற்கு இதற்கு முன்பு எந்தவித குற்றப்பதிவும் இல்லை என்றும் அவரது தரப்பில் விளக்கமானது அளிக்கப்பட்டுள்ளதுஎனினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com