

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷியா உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில் ஐ.நா.பொதுச்சபையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேசியதாவது:-
பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படக் கூடாது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த வேண்டும். நிரந்தர இடத்திற்கான இந்தியா-பிரேசிலின் வேட்புமனுவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இந்த உலகளாவிய அமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சீர்திருத்தத்திலும் வளரும் பிராந்தியங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.