பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பாக வரலாற்று ஒப்பந்தம்: இந்தியாவில் 105 பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய ரஷியா திட்டம்!

இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷியாவின் IL-114-300 ரக டர்போப்ராப் பயணிகள் விமானங்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன.
Pinnacle Air
Published on
Summary

இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நடைபெற்று வரும் Innoprom.India தொழில்முறை கண்காட்சியில் ரஷியாவின் யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய விமான நிறுவனங்களுடன் சுமார் 105 பிராந்திய பயணிகள் விமானங்களை வழங்குவதற்கான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான சிவில் விமானப் போக்குவரத்து உறவில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய விமான நிறுவனங்களின் பங்களிப்பு

இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷியாவின் IL-114-300 ரக டர்போப்ராப் பயணிகள் விமானங்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன. இதன்படி பினாகள் ஏர் நிறுவனம் 50 விமானங்களையும், ஏர் கேரளா நிறுவனம் 20 விமானங்கள் வரையிலும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும் Sleek Aviation நிறுவனத்துடன் 35 விமானங்களை வழங்குவதற்கும், அந்த நிறுவனத்தின் தளத்தில் முழுமையான விமான சிமுலேட்டர் பயிற்சியகத்தை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சி

பிராந்திய விமானங்களை நேரடியாக வழங்குவதோடு மட்டுமல்லாமல், ரஷியாவின் SJ-100 ரக 100 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்களை இந்தியாவில் உரிமம் பெற்று தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் (Hindustan Aeronautics Limited) நிறுவனத்துடன் இணைந்து இந்த விமானங்களின் பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம்

இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் 64 முதல் 70 இருக்கைகள் கொண்ட IL-114-300 விமானங்கள் குறைந்த செலவில் இயக்கக்கூடியவையாக இருக்கும். மேலும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் விமானப் பராமரிப்பு மற்றும் பாகங்கள் தயாரிக்கும் வசதிகள் இந்தியாவில் அமைவது உள்ளூர் வேலைவாய்ப்புகளையும் விண்வெளித் துறைத் திறன்களையும் மேம்படுத்தும்.

X

Maalai Malar
www.maalaimalar.com