அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: விமான நிலையம் சேதம்

நிலநடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைநந்து சேதமடைந்தன
Earthquake in California,
Published on: 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே காலை நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. 5.0 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது.

ள்ளது.இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் சில கண்ணாடிகள் உடைநந்து சேதமடைந்தன.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்மேற்கில் உள்ள கடலோர நகரமான மன்ஹாட்டன் கடற்கரையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவு

இது ரிக்டர் அளவில் 5-ஆக பதிவானது. பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் உண்டாகின. ஹெர்மோசா கடற்கரை அருகே ரிக்டர் 3 அளவிலும், மன்ஹாட்டன் கடற்கரை அருகே 2.8 ரிக்டர் அளவிலும் நில அதிர்வுகள் பதிவாகின.

நிலநடுக்கத்தை உணர்ந்த தும் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடைகளில் இருந்து பொ ருட்கள் கீழே விழுந்தன. சில வீடுகள் சேதம் அடைந்தன.

விமான நிலையத்தின் கண்ணாடிகள் சேதம்

லாஸ் ஏஞ்சல்ஸ்விமான நிலையம்நிலநடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் பயங்கரமாக குலுங்கியது.

இதனால் பீதியடைந்த பயணிகள் அலறியடித்து ஓடினார்கள். விமான நிலையத்தின் ஒரு முனை யத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. மேற்கூரைகளும் உடைந்து விழுந்தன. ஆனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்க ஓடுபாதை நெருங்கியது.

விமான சேவை பாதிப்பில்லை

நிலநடுக்கத்தின் அதிர் வை உணர்ந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, விமானத்தை தரையிறங்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

அந்த முயற்சியை கைவிட்டு மீண்டும் பறக்க உத்தர விட்டார். இதனால் ஓடுதளத்திற்கு மிக அருகே வந்த விமானம் மீண்டும் பறக்க தொடங்கியது.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வரு கிறது. நிலநடுக்கத்தால் விமான சேவைகள் பாதிக்கப் படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே முன் னெச்சரிக்கை நடவ டிக்கை யாக மன்ஹாட்டன் மற்றும் ஹெர்மோசா கடற்கரையில் உள்ள படகுத்துறைகள் மூடப்பட்டன.

X