மீண்டும் மூளும் மோதல்: "பாகிஸ்தான் ராணுவ தளம் மீது தாக்குதல்.. வீரர்கள் பலி" - ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் எல்லை மாகாணமான பக்திகாவில் டிரோன் தாக்குதல்கள் நடந்தேறின.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
Published on: 
Summary

பாகிஸ்தான் ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல்களை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானின் எல்லை மாகாணமான பக்திகாவில் 4 டிரோன் தாக்குதல்கள் நடந்தேறின.

இதில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் ரணைவ தளத்தையும் மற்றும் பல நிலைகளையும் தாக்கியதாக தன் அறிவிப்பில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அது எந்த தளம் என்ற தகவலை வெளியிடவில்லை.

சேதம்

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தரப்பில் உயிர்சேதம் மற்றும் பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த பதில் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கடந்த காலங்களிலும் தங்கள் மீதான பல தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தாதது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றமாக சூழல் நிலவுகிறது.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இரு நாடுகளிடையே ஆன மோதல் சிறிய அளவிலான போராக வெடித்தது. தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளின் மத்யஸ்தத்தின் பின் இது முடிவுக்கு வந்தது.

இதையடுத்து தன் ராணுவத்தை மேம்படுத்தும் நோக்கும் பாகிஸ்தான் மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்ந்து 2 பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

ஒன்று மெக்கா ஒப்பந்தம் என்றும் மற்றொன்று பத்ர் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. மெக்கா ஒப்பந்தம் போர் சமயங்களில் ஒருவருக்கொருவர் உதவுவதையும், பத்ர் ஒப்பந்தம் கூட்டாக இணைந்து ஆயுத உற்பத்தி, ராணுவ தொழில்நுட்ப மேம்பாடு, ராணுவ பயிற்சியையும் நோக்கமாக கொண்டுள்ளது.

பத்ர் ஒப்பந்தம் துருக்கி, இந்தோனேசியா, பாகிஸ்தான், கத்தார் இடையே கடந்த வாரம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com