

கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய கதைகளை சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். தன்னை சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கவனித்து அதனை விற்று வருகிறார்.
அண்டை வீட்டாரின் வீடுகளில் நடக்கும் சம்பவங்களின் தகவல்களின் உண்மைத் தன்மையுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பை தனது வீட்டில் சேமித்து வைத்திருகிறார்.
குறிப்பாக திருமணத்தை மீறிய உறவு, குடும்பச் சண்டைகள் போன்ற சுவாரசியமான அண்டை வீட்டு செய்திகளை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கு விற்று வருகிறார்.
ஒரு முறை ஒரு நபரின் தகவல்களை சேகரித்து கொடுப்பதற்கு சுமார் 7,00,000 கொலம்பிய பேசோக்கள் (தோராயமாக ரூ.21,073) வரை கட்டணமாகப் பெற்றுள்ளார் மிரியம்.
இந்த வித்தியாசமான செயல் மூலம் சம்பாதித்து சொந்தமாக இரண்டு வீடுகளை வாங்கியிருப்பதாகவும், இதன் மூலம் அன்றாட செலவுகளை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதன் மூலம் சம்பாதித்த பண பெட்டிகள் நிரம்பிய ஒரு பெட்டியியையும் வாடிக்கையாளர்களுக்கு அவர் காட்டினார்.
மிரியம் தனது பணியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்படுவதாகவும், ஆதாரம் இல்லாமல் தகவல்களைப் பரப்புவதில்லை என்றும் தெரிவித்தார்.
அக்கம்பக்கத்தில் நடக்கும் ஏறக்குறைய எல்லாவற்றையும் அறிந்திருப்பதால் அவருக்கு 'வதந்திகளின் ராணி' என்ற புனைப்பெயர் கிடைத்துள்ளதாகவும், மேலும் புறம் பேசுவதுதான் என் வாழ்க்கை அது என் ரத்தத்தில் ஊறிப்போயுள்ளது என்றும் மிரியம் தெரிவித்தார்.