சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் 2 மணிநேரம் உடற்கல்வி பாடம் கட்டாயம்

சீனாவில் 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன் விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது. உடல் பருமன் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் 2 மணிநேரம் உடற்கல்வி பாடம் கட்டாயம்
Published on

சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில் மாணவர்களின் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன்விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது. இதனால் உடல் பருமன் சீனாவில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு உடல் பருமன் பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக ஒருநாளில் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உடல் பருமன்பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

சீன மொழி ஆசிரியர், கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியருக்கு இணையாக உடற்கல்வி ஆசிரியருக்கும் மரியாதையை தரவேண்டும் என்றும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை பள்ளிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சீனாவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com