அயதுல்லாவை கொன்றதை போன்ற ஒரு தாக்குதல் மீண்டும் ஈரான் மீது நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் மீது கடந்த காலங்களில் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.
Trump warns Iran of 'Little Epic Fury' attack
Published on: 
Summary

அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தைக்கு ஈரான் வர மறுத்தால், அவர்கள் மீது ’லிட்டில் எபிக் ஃபியூரி’ (Little Epic Fury) என்ற ராணுவ தாக்குதலை தொடுப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் நாட்டின் மீது கடந்த காலங்களில் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இந்த தாக்குதலானது இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்காவால் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து டிரம்ப் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் நாட்டின் கையிருப்பில் இருந்த அணு ஆயுத திறன்கள் அழிக்கப்பட்டன.

மேலும் ராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மற்ற வகையிலும் அவர்களை தோற்கடித்தோம்” என்று கூறினார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற ராணுவ தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவுடனான ஒரு சுமூகமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர தவறினால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்று மீண்டும் ஒரு ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஈரான் மீது நடத்தப்படவுள்ள தாக்குதலுக்கு, ‘லிட்டில் எபிக் ஃபியூரி’ என்றும் டிரம்ப் பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து புளோரிடாவில் நடந்த குடியரசு கட்சி பிரசார கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், “நாம் இன்னொரு சிறிய எபிக் ஃபியூரியை தொடங்கலாம், ஈரான் புத்திசாலிகளாக இருந்தார்கள் என்றால், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்” என்று கூறினார்.

இருப்பினும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு ஈரான் செய்ய வேண்டிய நிபந்தனைகளை டிரம்ப் தெரிவிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com