நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவு

கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
Newzealand
Published on

நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com