காரில் இருந்து தள்ளி பெண் கற்பழிப்பு: கணவர் கண்முன் நடந்த கொடூரம்

டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள குர்கான் வர்த்தக மைய கட்டிடம் அருகே கணவனின் கண் எதிரே இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் இருந்து தள்ளி பெண் கற்பழிப்பு: கணவர் கண்முன் நடந்த கொடூரம்
Published on

டெல்லியின் புறநகர் பகுதியான குர்கானில் 22 வயது இளம்பெண் தனது கணவர் மற்றும் மைத்துனருடன் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.

குர்கான் வர்த்தக மைய கட்டிடம் வந்தபோது காரை நிறுத்தி கணவரும், மைத்துனரும் அருகில் உள்ள ஒரு இடத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றனர். அப்போது 2 கார்கள் அடுத்தடுத்து வந்து பெண் இருந்த காரின் அருகே நின்றது.

அதில் இருந்து 2 பேர் இறங்கி வந்து பெண்ணின் காரை நோட்டமிட்டனர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர். உடனே பெண்ணின் கணவர் அவர்களிடம் ஏன் காரை நோட்டமிடுகிறீர்கள் என்று கேட்டார். பெண்ணின் மைத்துனரும் வந்து கேட்டார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் திடீரென்று அவர்களது கூட்டாளி ஒருவன் வந்து காரில் இருந்த பெண்ணை வெளியே இழுத்துக் கொண்டு ஒதுக்குப் புறமான இடத்துக்கு சென்றான். அவளை மீட்கச் சென்ற கணவரையும், மைத்துனரையும் அடித்து உதைத்தனர். அவர்கள் கண் எதிரிலேயே பெண்ணை கற்பழித்தனர். பின்னர் 3 பேரும் காரில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுபற்றி பெண்ணின் கணவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். காரின் நம்பரையும் தெரிவித்தார். சிறிது நேரத்தில் போலீசார் காரை மடக்கி அதில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com