

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.
ஐசிசி-யின் ரிசர்வ் டே விதி கூறுவதாவது:-
உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டிகள் மழையால் தடைபட்டால் ரிசர்வ் டே என்ற முறைப்படி ஆட்டம் வேறொரு நாளுக்கு மாற்றப்படும். மேலும் போட்டி கைவிடப்பட்ட அதே மைதானத்திலேயே ஆட்டத்தில் மீதம் இருக்கும் ஓவரில் இருந்து வீசப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐசிசி-யின் இந்த விதியின் மூலம் மழைகாரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அரையிறுதி ஆட்டம் இன்று ஒருவேளை முடிவு தெரியாமால் கைவிடப்பட்டாலும் ரிசர்வ் டே முறைப்படி மீண்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.